JOTHIDA KALANITHI BHARATHI G

சர்ப்ப தோஷம் – ராகு கேது தோஷம் விதிவிலக்கு

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே நாம் இந்த பதிவில் சர்ப்ப தோஷம் விதிவிலக்கு அல்லது ராகு கேது தோஷம் விதிவிலக்கு பற்றி விரிவாக தெளிவாக பார்க்கலாம்

முதலாவதாக உங்களுடைய ஜாதக கட்டத்தில் லக்னம் சந்திரன் சுக்கிரன் ஆகிய இடங்களில் இருந்து ஒன்று இரண்டு நான்கு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களில் சர்ப்ப கிரகங்கள் அதாவது ராகு அல்லது கேது இருந்தால் அது ராகு கேது தோஷம் என்று அர்த்தம் இந்த ராகு கேது கிரகங்கள் தோஷம் தரக்கூடிய நிலையில் இருந்தாலும் கூட இதற்கு விதிவிலக்கு உண்டு

இந்த ராகு கேது தோஷம் உடைய ஜாதகர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறுவார்கள் நல்ல பலனும் உள்ளது கெடுபலனம் உள்ளது இந்த சர்ப்ப கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் நிச்சயமாக நல்ல பலன்களும் தீய இடங்களில் இருந்தால் தீமை தரக்கூடிய பலன்களும் சாதகருக்கு அமையும்.

சர்ப்ப தோஷம் – ராகு கேது தோஷம் விதிவிலக்கு

பொதுவாக ராகு கேதுக்கள் லக்னசுபரின் சாரத்தில் இருந்தால் ராகு கேது தோஷம் நிவர்த்தி அடையும் லக்னசுபர் என்பது லக்னத்தில் இருந்து ஒன்று ஐந்து ஒன்பது ஆகிய இட அதிபதிகள் ஆவார் இந்த ராகு கேதுக்கள் அவர்களுடைய நட்சத்திரத்தில் சாரத்தில் இருந்தால் ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும் இவ் அமைப்பில்  இருப்பது ராகு கேது விதிவிலக்காகும்.

லக்னம் சந்திரன் சுக்கிரன் ஆகிய இடங்களில் இருந்து தோஷம் ஏற்படுத்தக்கூடிய கட்டங்களில் இருக்கும் சர்ப்ப கிரகங்களான ராகு கேதுக்கள் குருவின்பார்வையோ குருவோடு சாரத்திலையோ அல்லது குருவுடன் எந்த வகையிலாவது தொடர்பு பெற்று இருந்தால் ராகு கேது தோஷம் நிவர்த்தியாகும் 

எளிமையாக புரியும் விதத்தில் சொன்னால் ராகு கேது தோஷ விதிவிலக்கு என்னவென்றால் லக்னசுபரின் சாரத்தில் ராகு கேதுக்கள் இருந்தாலும் அல்லது குருவின் தொடர்பை பெற்ற ராகு கேதுக்களாக இருந்தாலும் உங்கள் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் நிவர்த்தி நிவர்த்தி அடையும்

இப்பொழுது இந்த சர்ப்ப தோஷம் அல்லது ராகு கேது தோஷ விதிவிலக்கு பற்றி விரிவாக பார்த்தோம் மேலும் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் உங்கள் ஜாதகப்படி எப்பொழுது வேண்டுமானாலும் என்னை சந்தேகங்களுக்கு பதில் பெற்றுக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

சர்ப்ப தோஷம் - ராகு கேது தோஷம் விதிவிலக்கு
சர்ப்ப தோஷம் – ராகு கேது தோஷம் விதிவிலக்கு

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping