அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் தோஷம் உடைய ஜாதகரை மனம் புரியலாமா அதாவது திருமணம் செய்யலாமா என்ற கேள்விக்கு இப்பதிவின் வாயிலாக விடை கிடைக்கும்.
ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் ஜாதககரை மணம் புரியலாமா?
ஜோதிட விதிப்படி ராகு கேது தோஷம் உடையவர்கள் ராகு கேது தோஷம் உடைய ஜாதகத்தை திருமணம் செய்வது சிறப்பு.
செவ்வாய் தோஷம் உடையவர்கள் செவ்வாய் தோஷம் உடைய ஜாதகரை திருமணம் செய்வது சிறப்பு.
ராகு கேது தோஷம் செவ்வாய் தோஷம் இரண்டும் உடைய ஜாதகர் ராகு கேது தோஷம் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகரை திருமணம் செய்வது சிறப்பு

மேலே நான் சொன்ன குறிப்புகள் ஜோதிடப்படி அனைவராலும் பின்பற்றக்கூடிய ஒரு முறை எனவே அனைத்து ஜோதிடர்களும் செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உடைய ஜாதகத்தை சேர்க்க வேண்டும் என்றும் ராகு கேதுவுடைய ஜாதகத்தை ராகு கேது உள்ள ஜாதகத்தோடு சேர்க்க வேண்டும் என்கின்றனர்
நீங்கள் உங்களுடைய ஜாதகத்தில் முதலாவதாக ராகு கேது தோஷம் அல்லது செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை அனுபவம் பெற்ற ஜோதிடரினம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள்
அடுத்ததாக உங்களுக்கு வந்திருக்கும் பெண் அல்லது ஆண் அவர்களுடைய ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளதா அல்லது செவ்வாய் தோஷம் உள்ளதா என்பதை கேட்டு தெளிவு பெறுங்கள்
இப்பொழுது உங்களுக்கு தெரிந்திருக்கும் உங்களுடைய ஜாதகத்தில் என்ன தோஷங்கள் உள்ளது என்று அடுத்து நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு என்ன தோஷம் உள்ளது என்பது தெளிவாக தெரிந்து விடும் இதை முதலாவதாக நீங்கள் செய்வது உங்கள் கடமை
அடுத்து கட்டமாக ராகு கேது தோஷத்தில் கட்டத்தில் ராகு கேதுக்கள் எங்கு அமர்ந்து உள்ளார்கள் என்று தெரிய வேண்டும் அடுத்ததாக அவர்கள் எம்மாதிரியான பாதிப்புகளை உங்கள் திருமண வாழ்வில் ஏற்படுத்தப் போகிறார்கள் என்பதையும் பார்த்து விட வேண்டும்
அடுத்த கட்டமாக உங்கள் ஜாதகத்தோடு சேர்க்க வேண்டிய ஜாதகத்தில் ராகு கேதுக்கள் எங்கு கட்டத்தில் இருக்கிறார்கள் என்றும் அவர்களுடைய வீரியம் எப்படிப்பட்டது பிறகு அவர்கள் திருமண வாழ்வில் எம்மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துவார்கள் என்பதை தெளிவாக பார்க்க வேண்டும்
இப்பொழுது உங்களுக்கு புரிந்துவிடும் ராகு கேதுக்கள் உங்களுடைய இருவருடைய ஜாதகத்தில் எந்தெந்த கட்டத்தில் இருந்து என் மாதிரியான பலன்களை வெளிப்படுத்துவார்கள் என்பதை புரிந்து கொண்டு பாதிப்பு வராத வண்ணம் இந்த ராகு கேது தோஷ ஜாதகத்தை இணைக்கலாம்
இதே போன்று தான் இந்த செவ்வாய் தோஷம் உடைய ஜாதகத்தை அவர்கள் இருவருக்கும் எந்தெந்த கட்டத்தில் இந்த செவ்வாய் உள்ளார் என்பதை பார்த்து வீரியம் பார்த்து தாராளமாக திருமணம் செய்து அவர்களை இணைக்கலாம்
இப்பொழுதுதான் முக்கியமான விஷயத்தை பார்க்க இருக்கிறோம் பொதுவாக அந்தந்த தோஷ ஜாதகரை அந்தந்த தோஷம் உடைய ஜாதகத்துடன் இணைக்கிறோம் இது இயல்பு
சுத்த ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் தோஷம் மட்டுமே உள்ள ஜாதகத்துடன் இணைப்பது
அடுத்ததாக செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகருக்கு ராகு கேது தோஷம் மட்டும் உள்ள ஜாதகத்தை இணைப்பது
மேலே சொன்ன இரண்டு கருத்துக்களும் எளிமையாக புரியும் விதத்தில் சொல்லப்போனால் உங்களுக்கு ராகு கேது இருக்கும் அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும்
அல்லது உங்களுக்கு செவ்வாய் தோஷம் இருந்து உங்களுடன் இணைக்கும் ஜாதகருக்கு ராகு கேது தோஷம் இருக்கும்
இம்மாதிரியான ஜாதக அமைப்பு உடையவர்களை சேர்க்கலாமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி அனைவரும் மனதிலும் இருக்கும்
ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் ஜாதககரை மணம் புரியலாமா?
நிச்சயமாக ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் ஜாதகரை மனம் புரியலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை
ஆனால் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் உங்களுடைய ஜாதகத்தை கொடுத்து உங்களுடன் இணையப்போகும் ஜாதகத்தையும் கொடுத்து இரண்டு ஜாதகங்களும் கட்ட ம் பொருத்தம் உண்டா என்று முதலில் பார்க்க வேண்டும் அடுத்ததாக இரண்டு வெவ்வேறு தோஷ உடைய அதாவது ராகு கேது மற்றும் செவ்வாயை குறிப்பிடுகிறேன் இந்த இடத்தில்
இந்த தோஷம் உடைய ஜாதகத்தை பொருத்தும் பொழுது இவர்களுக்கு பாதிப்புகள் வருமா பாதிப்புகள் அதிகமாக இருக்குமா குறைவாக இருக்குமா என்பதை துல்லியமாக பார்த்து இணைத்தால் இதில் எந்த ஒரு பயமும் இல்லை
என்னுடைய கருத்து
ராகு கேது தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் ஜாதகரை மனம் புரியலாம் அதேபோல் செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் ராகு கேது ஜாதகரையும் மனம் புரியலாம்
ஆனால் இணைய போகும் இரண்டு ஜாதகங்களை முறையாக அனுபவம் வாய்ந்த ஜோதிடரிடம் முறையாக ஜாதகம் பார்க்க வேண்டும் பொருத்தம் உண்டு என்றால் தாராளமாக திருமணம் செய்யலாம் பொருத்தம் இல்லை என்றால் விலகி விடுவது நல்லது
பொதுவாக எந்த தோஷம் உடையவராக இருந்தாலும் அதற்குரிய தகுந்த பரிகாரத்தை செய்வதன் மூலமாக அந்த தோஷத்தில் வரும் பாதிப்பிலிருந்து விடுபடுகின்றனர்
அனைத்து விதமான விதிக்கும் விதிவிலக்கு என்று ஒன்று நிச்சயமாக உண்டு அதனால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை
நான் எண்ணற்ற ஜாதகங்களை பார்த்துள்ளேன் ஏதேனும் ஒரு வகையில் அனைவருடைய ஜாதகத்திலும் செவ்வாய் தோஷமும் ராகு கேது தோஷமும் உள்ளது திருமணம் ஆனவர்களுக்கும் சரி ஆகப் போகும் முன்பாக இருப்பவர்களுக்கும் சரி தோஷம் என்பது அவர்களுடைய விசா புத்தி காலங்களில் அதனுடைய வேலைகளை காட்டுகிறது குறைவாக உடையவர் அதாவது நல்ல பலனை அனுபவிக்கிறார் தோஷம் அதிகமாக உள்ளவர் கெடுபலனை அனுபவிக்கிறார் ஒரு ஜாதகர் ஒரு சிறந்த ஜோதிடரிடம் தன்னுடைய ஜாதகம் பற்றிய விளக்கங்களை கேட்டு அறிந்தால் இந்த குழப்பம் உங்களுக்கு நிச்சயமாக வராது என்பதை உறுதி அளிக்கிறேன் நன்றி வணக்கம் மீண்டும் இது போன்ற நல்ல பதிவில் உங்களை சந்திக்கிறேன் நன்றி வணக்கம்.
