வணக்கம் இந்த பதிவில் திருமண ஜாதக பொருத்தம் ( jathaga porutham in tamil) முக்கிய திருமண பொருத்தம் – சிறந்த திருமண பொருத்தம் ஆகியவற்றை பற்றி முழுமையாக பார்க்க போகிறோம் வாருங்கள் பதிவிற்குள் செல்லலாம்
திருமண ஜாதக பொருத்தம் jathagam porutham in tamil
முன்னோர்கள் காலத்திலிருந்து இந்த திருமண ஜாதக பொருத்தம் பார்ப்பது என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டு வந்தது அதற்கு காரணம் திருமணம் பொருத்தம் பார்த்து திருமணம் செய்த தம்பதியினர் திருமண வாழ்வில் நன்றாக இருப்பதால்தான். இன்றைய காலகட்டங்களில் திருமணம் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்பவர்களை விட சரியாக திருமண பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்து அவஸ்தை படுபவர்கள்தான் அதிகம்.
சிறந்த திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்யும் நபர்கள் நிச்சயமாக சந்தோஷமான திருமண வாழ்க்கையை வாழ்கின்றனர்.
திருமண பொருத்தம் பார்த்தும் திருமண வாழ்வில் ஏமாற்றங்கள் ஏன் ஏற்படுகிறது என்று என்றைக்காவது யோசித்து உள்ளீர்களா?
திருமணம் பொருத்தம் பார்க்கும் பொழுது பல்வேறு விதமான படிநிலைகளை நாம் ஆராய வேண்டும் அவ்வாறு ஆராய்ந்து சிறந்த திருமண பொருத்தம் இருந்தால் மட்டுமே இரு ஜாதகங்களை இணைக்க வேண்டும் இல்லை என்றால் திருமண வாழ்வு கேள்வி குறிதான்.
12 வகையான திருமண பொருத்தம் – Accurate Thirumana Porutham in Tamil
நண்பர்களே ஜோதிட ரீதியாக பார்த்தோம் என்றால் பல்வேறு வகையான திருமண பொருத்தங்கள் உள்ளது அதில் 12 வகையான திருமண பொருத்தங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது இந்த காலகட்டத்தில் நாம் பத்து பொருத்தம் பார்த்தால் போதுமானது 12ம் பார்த்தால் மிகவும் சிறந்தது
Accurate Thirumana Porutham in Tamil – சிறந்த திருமண பொருத்தம்
நட்சத்திர பொருத்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் உள்ள அனைத்து பொருத்தங்களும் இருந்தால் இதுதான் சிறந்த திருமண பொருத்தம்
திருமண பொருத்தம் பார்க்க ஆண் பெண் இருவருடைய ஜாதகத்தில் என்ன நட்சத்திரத்தில் பிறந்தார்கள் என்பதை வைத்து அந்த இரண்டு ஜாதகத்திலும் அவர்களுடைய இரண்டு நட்சத்திரமும் சரிவர பொருந்தி வருகிறதா என்பதை பார்க்கும் முறையை நட்சத்திரப் பொருத்தம் இந்த நட்சத்திர பொருத்தம் நன்றாக அமைந்து விட்டால் அனைத்தும் சுபம் இப்பொழுது நட்சத்திரப் பொருத்தம் பற்றி விரிவாக பார்க்கலாம்.
தினப்பொருத்தம் ( Dina Porutham tamil)
தினப்பொருத்தம் என்பது திருமணம் செய்யப் போகும் ஆண் மற்றும் பெண்ணின் நட்சத்திரங்களுக்கு இடையே உள்ள தூரம் வைத்து கணக்கிடப்படுகிறது இந்த தினப் பொருத்தம் பார்க்கும் பொழுது இந்த தம்பதியினர் திருமண வாழ்வில் தினம் தினம் எம் மாதிரியான சந்தோஷங்களையும் இன்னல்களையும் பெறப்போகிறார்கள் என்பதை இந்த தினப் பொருத்தத்தின் வாயிலாக நம் துல்லியமாக பார்க்க முடியும்.
கண பொருத்தம் (Gana Porutham)
கண பொருத்தம் இரண்டு பேருக்கும் இருந்து விட்டால் இருவருடைய குணங்களும் ஒத்து போகும் இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போனால் இவர்கள் நீண்ட நாள் சேர்ந்து வாழ்வார்கள் எனவே இந்த கண பொருத்தம் தம்பதியினர் உடைய குணாதிசயங்களை பற்றி தெரிந்து கொள்ள பார்க்கப்படுகிறது.
மகேந்திர பொருத்தம் ( Mahendra Porutham)
மகேந்திர பொருத்தம் மிகவும் முக்கியம் ஏனென்றால் திருமண வாழ்வில் ஆண் பெண் சேர்வதே குழந்தை பாக்கியத்திற்காக தான் அந்த குழந்தை பாக்கியம் பெரும் தகுதி இந்த இருவருக்கும் உள்ளதா என்பதை பற்றிய அறிந்திட இந்த மகேந்திர பொருத்தம் பார்க்கப்படுகிறது.
யோனி பொருத்தம் (Yoni Porutham)
யோனி பொருத்தம் மிகவும் முக்கியம் ஏனென்றால் திருமண வாழ்வில் கணவன் மனைவி இருவரும் தாம்பத்தியத்தில் நன்றாக இருந்தால் மட்டுமே அந்த உறவு வலுப்படும் அதற்காக இந்த யோனி பொருத்தம் மிக மிக முக்கியம் இல்லை என்றால் இவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும்
ராசி பொருத்தம் (Rasi Porutham In Tamil)
ராசி பொருத்தம் இருக்க வேண்டும் பொதுவாக திருமணமாகக் கூடிய தம்பதிகளுக்கு இடையேயான பந்தம் உறவு கணக்கிட பேரு உதவியாக உள்ளது ராசி பொருத்தம் முக்கியம் ஏனென்றால் அடுத்த தலைமுறை விருத்தி செய்ய இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது
ராசி அதிபதி பொருத்தம் ( Rasi Adhipathi Porutham)
இந்த ராசி அதிபதி பொருத்தம் தம்பதிகள் இணக்கமான வாழ்வு வாழ்வதற்கும் தன்னுடைய சந்ததியை விருத்தி செய்வதற்காகவும் இந்த பொருத்தம் நிச்சயமாக நாம் பார்க்க வேண்டும்
வசிய பொருத்தம் (Vasiya Porutham)
திருமண வாழ்வில் ஈடுபட போகும் தம்பதியினர்கள் காதல் உணர்வுடனும் வெறுக்கும் தன்மையற்று விரும்பும் தன்மையுடன் வாழ இந்த வசிய பொருத்தம் தேவைப்படுகிறது அதனால் இவர்களுக்குள் இந்த வசியப்படுத்தும் இருந்து விட்டால் இவர்களுக்குள் காதல் பெருக்கெடுக்கும் ஒருவரை ஒருவர் விட்டு விலகாமல் இருக்க இந்த வசிய பொருத்தம் தேவை
ரஜ்ஜூ பொருத்தம் ( Rajju Porutham In Tamil)
திருமண பொருத்தத்தில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் பொருத்தம் இந்த ரஜ்ஜுப் பொருத்தம் ஏனென்றால் திருமண வாழ்வில் உயிர் நாடி இதுதான் காரணம் உயிர் சம்பந்தப்பட்ட மரணம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக பார்க்கப்படுவதால் தான் தம்பதியினர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து உடல் நலத்தோடு வாழ்வார்களா இல்லை கணவன் உயிர் சேதம் மனைவி உயிர் சேதம் போன்றவை ஏற்படுமா என்பதை பார்க்க இந்த பொருத்தம் உதவுகிறது
நான் பெரும்பாலும் ஜாதகம் பார்க்கும் பொழுது என்னிடம் வரும் நண்பர்கள் ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்று நிராகரிக்கப்பட்ட ஜாதகத்தை கொண்டு வருகின்றனர்
இந்த ரஜ்ஜூ பொருத்தம் இல்லை என்றாலும் எந்த ரஜ்ஜூ என்று கண்டுபிடித்து அது ஏற்கணமா இறங்க கனமா என்று பார்த்தால் ரஜ்ஜூ பொருத்தம் உள்ளதா இல்லை என்று தெளிவாக சொல்ல முடியும் ரஜ்ஜூ பொருத்தம் இல்லாதவர்களுக்கு இதில் பொருத்தம் இருந்தாலும் திருமணம் செய்து வைக்கலாம்.
வேதைப் பொருத்தம் (Vedhai Porutham In Tamil)
வேதைப் பொருத்தம் இருந்தால் தான் தம்பதியினருக்கு துக்கம் இல்லாத வாழ்வு அமையும் என்னாலும் துயரம் துக்கம் என்றால் வாழ்க்கை எப்படி இருக்கும் கசப்பானதாக தானே இருக்கும் அதற்காகத்தான் இந்த வேலை பொருத்தம் பார்த்து திருமணம் செய்யுங்கள் என்கின்றார்கள்.
நாடிப் பொருத்தம் (Nadi Porutham in Tamil)
இந்த நாடிப் பொருத்தமும் வம்சா விருத்திக்காகவும் வாழையடியா வாழையாக நம் தலைமுறை தலைக்க வேண்டும் என்பதற்காக பார்க்கப்படுகிறது
விருட்சப் பொருத்தம் ( Verucha Porutham in Tamil )
இந்த விருச்ச பொருத்தம் ஜாதகர்களில் பால் மரத்தை கொண்டு பார்க்கப்படுகிறது யாரோ ஒருவருக்கு பால் இருந்தால் சிறப்பு உத்தமமாக இருக்கும்.
நீங்கள் இப்பொழுது பார்த்த 12 பொருத்தமும் சிறந்த திருமண பொருத்தம் (Accurate Thirumana Porutham in Tamil) நண்பர்களே இந்த சிறந்த திருமண பொருத்தம் அமைந்து விட்டால் இதைவிட திருமண வாழ்விற்கு வேறு என்ன வேண்டும்.
சில சமயங்களில் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பொழுது இந்த 12 வகையான திருமண பொருத்தமும் இருக்காது நம்மில் பல பேருக்கு குறைந்த அளவிலான நட்சத்திரதிருமண பொருத்தமே இருக்கும் எனவே நீங்கள் முக்கிய திருமண பொருத்தம் மற்றும் பார்த்தால் போதும்
முக்கிய திருமண பொருத்தம் (Mukkiya Tirumana Porutham)
முக்கிய திருமண பொருத்தம் இந்த பொருத்தம் இருந்தால் தாராளமாக திருமணம் செய்யலாம் ஏனைய பொருத்தங்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை
தினப்பொருத்தம்
கன பொருத்தம்
மகேந்திர பொருத்தம்
ஸ்திரி தீர்க்க பொருத்தம்
யோனி பொருத்தம்
ராசி பொருத்தம்
ராசி அதிபதி பொருத்தம்
வசிய பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
வேதை பொருத்தம்
மேலே சொன்ன இந்த பொருத்தத்தில் இதைவிட மிக முக்கிய திருமண பொருத்தம் உள்ளது அது என்ன என்று பார்க்கலாம்
5 முக்கிய திருமண பொருத்தம்
தினப்பொருத்தம்
கன பொருத்தம்
யோனி பொருத்தம்
ராசி பொருத்தம்
ரஜ்ஜு பொருத்தம்
எந்த பொருத்தம் இல்லை என்றாலும் திருமண பொருத்தத்தில் இந்த ஐந்து முக்கிய திருமண பொருத்தம் இருந்தால் தாராளமாக திருமணம் செய்யலாம் இதைத் தாண்டி இந்த பொருத்தமும் இல்லை என்றால் நிச்சயமாக ஒரு நல்ல ஜோதிடர் தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது
சிவசக்தி ஜோதிட நிலையம்

ஜாதகம், திருமணபொருத்தம், நியூமராலஜி, பிரசன்னம், ஆகியவை 100% துல்லியமாக பார்த்து தரப்படும்.
தொழில் பிரச்சனை, வருமானம் தடைபடுதல், குடும்ப பிரச்சனை, திருமண தடை, கணவன் மனைவி பிரச்சனை, எதிரி தொல்லை, கடன் தொல்லை, பில்லி சூனியம் ஏவல் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும்.
அனைத்து விதமான ஹோமங்களும் பரிகாரங்களும் சிறப்பாக செய்து தரப்படும். மேலும் விபரங்களுக்கு இப்பொழுது தொடர்பு கொள்ளுங்கள்