JOTHIDA KALANITHI BHARATHI G

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க

ஆண்களுக்கு திருமண தடை நீங்க பெண்களுக்கு திருமண தடை நீங்க செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான பரிகாரங்களும் வழிபாட்டு முறைகளும் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் இந்த பதிவில் பார்க்கலாம் 

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே பொதுவாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க ஜோதிடர்கள் பல வழிபாட்டு முறைகளை சொல்கின்றனர் இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பதை பற்றியும் திருமண தடை நீங்க என்ன செய்யலாம் என்பதை பற்றியும் என்னுடைய கருத்தை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன் 

பொதுவாக திருமண தடை எதனால் ஏற்படுகிறது 

உங்களுடைய ஜாதகத்தில் தோஷங்கள் அதாவது செவ்வாய் தோஷம் ராகு கேது தோஷம் சனி தோஷம், இது போன்ற பல்வேறு விதமான தோஷங்கள் உள்ளது அந்த தோஷங்கள் மூலமாக உங்கள் ஜாதகம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது களத்திர ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஏழாம் பாவகம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் இம்மாதிரியான திருமண தடைகள் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளது 

இதைத் தாண்டி பூர்வ புண்ணிய தோஷங்களோ அல்லது வம்சாவளி தோஷங்களும் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு திருமணம் வெகு நாட்கள் ஆயினும் கைகூடாமல் செல்லலாம் அல்லது திருமணமே ஆகாத நிலை கூட ஏற்படலாம் 

திருமணம் சீக்கிரம் நடக்க என்ன செய்ய வேண்டும் 

பொதுவாக உங்களுடைய ஜாதகத்தை நல்ல ஒரு ஜோதிடரிடம் காட்டி அதில் எந்தமாதிரியான தோஷங்கள் உள்ளதை என்பதை கண்டுபிடிக்க வேண்டும் அதிலும் அந்த தோஷத்தின் வீரிய அளவு எந்த அளவில் உள்ளது என்பதை பார்த்து உங்களுக்கு அமையக்கூடிய வரன் இம்மாதிரியான வரன் என்பதையும் துல்லியமாக அனைத்து பெற்றுக்கொள்ள வேண்டும் 

பிறகு உங்கள் ஜாதகத்தில் உள்ள தோஷ கிரகத்தையும் தோசை கிரகம் நின்ற சாரநாதன் கிரகத்தையும் தொடர்ந்து அதற்கு தகுந்தது போல் வழிபாடு செய்ய வேண்டும் சாந்தி செய்ய வேண்டும் இந்த முறையை நீங்கள்  பின்பற்ற வேண்டும் 

திருமணத்தடை நீக்கும் கோவில்கள் 

அனைத்து ஜோதிடர்களுமே ஒவ்வொரு தோஷத்திற்கும் ஒவ்வொரு விதமான கோவில் வழிபாட்டு முறைகளை சொல்வார்கள் திருமணம் சீக்கிரம் நடக்க நீங்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகத்தின் ஆதிபத்திய கோவில்களை வழிபாட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் உங்களுக்கு திருமணம் சீக்கிரம் நடக்கும் 

திருமண தடை நீக்கும் கோவில்கள் கும்பகோணம் 

கும்பகோணம் என்றாலே கோயில்கள் தான் கும்பகோணத்தில் திருமண தடை நீக்கும் கோயில்கள் ஏராளமாக உள்ளது ஆனால் உங்கள் ஜாதகத்தில் உள்ள கோயில்கள் வழிபாடு செய்தால் மட்டுமே உங்களுக்கு சாதகமாக அமையும் 

இந்த பதிவின் நோக்கமே திருமண தடையில் நீங்க வேண்டும் என்பதுதான் 

எனவே முதலாவதாக உங்கள் ஜாதகத்தை நல்ல ஜோதிடர்களிடம் பார்க்க வேண்டும் பிறகு இம்மாதிரியான தோஷங்கள் உங்கள் ஜாதகத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை பார்க்க வேண்டும் மூன்றாவதாக தோஷத்தின் வீரிய அளவை தெரிந்து கொண்டு பின்பு முறையான கோவில் வழிபாடுகளும் முறையான பூஜை முறைகளும் செய்யலாம் இவ்வாறு செய்யும் பட்சத்தில் திருமண காலம் கண்டிப்பாக ஜோதிடருக்கு தெரியும் அதை பார்த்து அவர் சொல்லும் கோயில் வழிபாட்டு முறைகளை பின்பற்றி சீக்கிரம் திருமணம் நடக்க இறைவனை பிரார்த்தியுங்கள் நிச்சயமாக இறைவன் உங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுவார் நன்றி வணக்கம் மீண்டும் பயனுள்ள பதிவில் சந்திக்கிறேன் நன்றி வணக்கம்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க
ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடை நீங்க

Leave a Reply

Shopping cart

0
image/svg+xml

No products in the cart.

Continue Shopping